குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

0
159
#image_title

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வத்தை வழிபட தனியாக செல்லாமல் நம் உற்றார் உறவினர் மற்றும் நம் உடன் பிறந்தவர்கள் இப்படியாக நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. நாம் மற்ற சில கோயில்களுக்கு செல்லும் போது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்து விட்டு வந்து விடுவோம்.

ஆனால் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட வேண்டும். நம் குல தெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட வேண்டும். குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தியும் வழிபடலாம். சிலர் அரிசி மாவில் வெல்லம் சேர்த்து மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள். நம் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் அதற்கு முன்பு குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது.

இதனால் தான் குழந்தை பிறந்தவுடன் அதற்கு மொட்டை அடித்து காது குத்துவதை குலதெய்வ கோயிலில் வைக்கிறார்கள். சிலர் தங்களது பிள்ளைகளின் திருமணத்தை குலதெய்வ கோயிலில் நடத்துவார்கள். நாம் நம் குலதெய்வத்திடம் வேண்டுதல்களை தொடர்ந்து வைத்துக் கொண்டு வந்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

Previous article1 ஸ்பூன் மஞ்சள் இருந்தால் 7 நாளில் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்து விடும்..!!
Next articleதெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?