ஆவணி மாதம் ஞாயிறு கிழமை மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்!! இதோ உங்களுக்காக…

0
275

ஆவணி மாதம் ஞாயிறு கிழமை மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்!! இதோ உங்களுக்காக…

 

ஆவணி மாதம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சூரியன் தான். சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு தான் பலமான வீடு. நமக்கு எல்லாம் ஆத்மபலத்தை தருபவர் சூரியனே. எனவே தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக பெரியோர்கள் சொல்வார்கள். அர்ஜுனனுக்கு ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இந்த மாதத்தில் தான் பிறந்தார்.இதனால் தான் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது.

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவை புகட்டினால் அந்த குழந்தைகளும் சிறந்து விளங்குவர்.சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும்.கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.ஆவணி ஞாயிறு விரதத்தை இருப்பவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம். ஆவணியில் மாதத்தில் தான் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். மேலும் இதனால் பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாய பணிகளுக்கு செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் விரதத்தை முழுமையாக கடைப்பிடித்து வருவார்கள்.

இதன் காரணமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் மேலும் நன்மை உண்டாகும். இதனால் மக்கள் அனைவரும் மன நிம்மதியுடனும் செல்வம் செழிப்புடனும் வாழ்ந்து வருவார்கள்.

 

 

Previous articleபிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்!
Next articleஅடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here