அடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?

0
481

அடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?

 

நாம் ஒருவர் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்போம். அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொடுப்போம். இதனிடையே பிறருக்கு பரிசுகளைக் கொடுப்பதும், பிறரிடம் இருந்து பரிசுப்பொருட்களை வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். மற்றவருக்கு மனம் நிறைந்து பாசமுடன் கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் விலைமதிப்பில்லாதது.

ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சில பொருட்களை தரக்கூடாது. சில பொருட்களை பரிசாக கொடுப்பதால் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். மற்றவர்களுக்கு எந்தெந்த பரிசுகளைத் தரலாம் தரக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க!.

 

ஜோடியாக உள்ள யானை பொம்மைகளைப் பரிசாகக் கொடுக்கலாம். வெள்ளியால் ஆன ஜோடி யானை பொம்மைகள், தங்கம் பூசப்பட்ட ஜோடி யானை பொம்மைகள், வெங்கலத்தாலான ஜோடி யானை பொம்மைகள், மரத்தால் செய்யப்பட்ட ஜோடி யானை பொம்மைகள் ஆகியவற்றை பரிசாக தரலாம். ஜோடியாக உள்ள யானை பொம்மைகளை பரிசாக கொடுப்பது மிகவும் சிறந்தது.

வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிக சிறந்தது. வெள்ளி பொருட்கள் லட்சுமியை குறிப்பதாகும்.துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை நிறையப்பேர் அதிகம் பரிசாகக் கொடுக்கிறார்கள். ஆனால் துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை அன்பளிப்பாக தரக்கூடாது. துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளைப் பரிசாகக் கொடுப்பது, கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் தீமையை உண்டாக்கும்.

பெரும்பாலானோர் கடிகாரங்களை பரிசாக தருவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் கடிகாரத்தை பரிசாக தருவது எதிர்மறை எண்ணங்களை அளித்து வாழ்நாளை குறைத்துவிடும். ஆகையால் கடிகாரங்களை மற்றவர்களுக்கு பரிசாகக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களை பரிசாகக் கொடுப்பது என்பது உங்களின் அதிர்ஷ்டத்தை மற்றவர்களுக்கு தருவது போன்றதாகும். மீன் தொட்டிகள், தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பரிசாகத் தரக்கூடாது.காலணிகளை பரிசாகத் தருவது மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். ஷீக்களை கூட பரிசாக வழங்கக்கூடாது.

 

Previous articleஆவணி மாதம் ஞாயிறு கிழமை மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்!! இதோ உங்களுக்காக…
Next articleசூப்பர் டேஸ்ட் கொண்டசுவையான குதிரைவாலி பிரியாணி செய்வது எப்படி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here