தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!
1)கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பின்னர் கை, கால், முகத்தை அலும்பி சுத்தம் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் இருந்து நம்முடன் வீடு வரை வந்து இறை சக்தி திரும்ப சென்று விடும்.
2)ஆலயத்திற்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு தான் வேண்டும். வழியில் உறவினர் வீட்டிற்கு செல்வது இது போன்று எதையும் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் இருந்து நம்முடன் வந்த இறைசக்தி பாதியிலேயே நம்மை விட்டு நீங்கிவிடும்.
3)கோயிலில் கொடுக்கும் விபூதி, குங்குமத்தை வீட்டிற்கு வந்ததும் கண்ட இடத்தில் போட்டு வைக்கக் கூடாது. பூஜை அறையில் தான் வைக்க வேண்டும்.
4)கோயிலுக்கு சென்றுவிட்டு வந்ததும் அசைவம் சாப்பிடக் கூடாது.
5)கோயிலுக்கு சென்று வந்ததும் சாப்பிடக் கூடாது. சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து விட்டு பின்னர் மற்ற வேலைகளை கவனிக்கவும்.
6)கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் தலைக்கு குளிக்கக் கூடாது.
7)கோயிலுக்கு சென்று வீடு வரும் போது தான தர்மம் செய்யக் கூடாது.