வெந்தயத்தின் இந்த பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அப்புறம் விடவே மாட்டீங்க!
காலை எழுந்தவுடன் ஊற வைத்த வெந்தய நீரினை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த கதையின் மூலமாக காணலாம்.
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது. இது நமக்கு சிறந்த சுவையை அளிப்பதிலிருந்து அனைத்து விதமான வியாதிகளையும் போக்குவதற்கு மிகவும் உதவுகிறது.
வெந்தயத்தின் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.மேலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினசரி நம் ஊறவைத்து காலையில் குடித்து வருவதுடன் காரணமாக நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளும் ஏற்படும்.
வயிற்றுப் பிரச்சினையினால் அவதிப்பட கூடியவர்கள் ஒரு டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 200 மில்லி கிராம் நீர் ஆகியவற்றை சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை உண்ட பிறகு அதன் நீரையும் பருக வேண்டும். இவ்வாறு பருகுவதன் காரணமாக நெஞ்செரிச்சல் போன்ற அமிலப் பிரச்சினைகளை போக்க உதவும்.
நீரிழிவு நோயினால் அவதிப்பட கூடியவர்கள் வெந்தயம் ஓர் மிகச்சிறந்த மருந்தாகும். ஊற வைத்த வெந்தயத்தின் பருவதன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மாற்றி சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
முளைகட்டிய வெந்தயத்தை உண்பதை விட ஊறவைத்து பருகுவதன் காரணமாக 30 சதவிகிதம் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இதனை தினசரி பருகி வருவதன் காரணமாக இந்த பிரச்சனைகளில் இருந்து குணமடையலாம்.
ஊற வைத்த வெந்தயத்தை மற்றும் அதன் நீரையும் பருகி வருவதன் காரணமாக அஜீரண பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. வெந்தயத்தினை உண்பதன் காரணமாக உடலினை வெப்பப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும்.
நீரில் ஊறவைத்த வெந்தயம் அதிகப்படியான கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. வெந்தயத்தில் அதிகப்படியான நார்சத்துக்கள் நிறைந்துள்ளது.இதன் காரணமாக உடல் பருமன் உள்ளவர்கள் தினசரி இதனை ஊற வைத்து பருகி வர வேண்டும்.