CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!!
இன்றைய அவசர காலங்களில் யாரும் காத்திருந்து பயணத்தை மேற்கொள்வதில்லை. தங்கள் கையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் கண்ணிமைக்கும் வினாடிக்குள் தனது வீட்டின் வாசலிலேயே தம் பயணம் செல்வதற்காக கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற எந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகிறார்களோ அந்த வாகனத்தை வர வைத்து விடுகிறார்கள்.
இப்படி வாழ்கின்ற இன்றைய காலகட்டத்தில் எந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக அவசர சூழல்களில் கால் டாக்சி அல்லது ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் ஏற்படும். எதுவும் திட்டமிட்டப்படி நடக்காது என்பதற்கு இதை தவிர சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
எப்படியும், அவசர சூழல்களில் கால் டாக்சிக்களை புக் செய்யும் போது அவசியம் குறிப்பிட்ட சேவைகளின் செயலி ஸ்மார்ட்போனில் அவசியம் இன்ஸ்டால் செய்ய வேண்டும். நேரம் இருந்தால் குறிப்பிட்ட செயலிகளை இன்ஸ்டால் செய்வதில் பிரச்சனை இல்லை, அவசர சூழல்களில் மற்றவர்களிடம் உதவியை நாடாமல் கார் புக் செய்ய முடியும் என தெரியுமா?
1: முதலில் ஒரு கால் டாக்ஸியை எப்படி புக் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2: நீங்கள் புக் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும்.
3: இதன் பிறகு நீங்கள் எந்த நிறுவனத்தின் காரை அல்லது ஆட்டோ கொஞ்சம் வாகனத்தை புக் செய்ய விரும்புகிறீர்களோ அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
4: பின்பு அதில் கேட்கப்பட்ட உங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
5: உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை நீங்கள் பதிவு செய்தால் மட்டும் போதும்.
6: பின்பு நீங்கள் இருக்கும் இடத்தின் லொகேஷனை ஷேர் செய்யும் ஆப்ஷன் காட்டப்பட்டிருக்கும் அதனை நீங்கள் எனேபிள் செய்ய வேண்டும்.
7: அதன் அடுத்த படியாக நீங்கள் பயணம் மேற்கொள்ளும் இடம் மற்றும் கட்டண விவரம் கொடுக்கப்பட்டிருக்கும்.
8: இதனை உறுதி செய்யும் விதமாக request ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
இப்படி தான் நீங்கள் கால் டாக்ஸியை புக் செய்ய வேண்டும்.இதன் பிறகு கால் டாக்ஸி புக் செய்து பயணம் மேற்கொண்டு வருகிறீர்கள் என்றால் அந்த டிரைவர் உங்களிடம் cash அல்லது G- pay என்று கேட்கிறார்கள் என்றால் உங்களுக்கு எது வசதியாக இருக்குமோ அதனை நீங்கள் பயன்படுத்தலாம்.
இது எல்லாம் சரி அதுவே நீங்கள் கால் டாக்ஸி புக் செய்துவிட்டு உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அதனை எப்படி கேன்சல் செய்வது என்று தெரியாமல் உள்ளீர்களா கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கார் புக் செய்து ஐந்து நிமிடத்தில் கேன்சல் செய்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை அதுவே நீங்கள் அந்த வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்த வுடனும் அல்லது ரொம்ப தாமதமாகவும் கேன்சல் செய்கிறீர்கள் என்றால் அடுத்த முறை நீங்கள் புக் செய்யும்போது கட்டாயம் உங்களிடம் பணம் பிடிக்கப்படும்.
இதையெல்லாம் கவனமாக தெரிந்து கொண்டு கார் புக் மற்றும் கேன்சல் செய்வதைசெய்யுங்கள்.