தெரிந்து கொள்ளுங்கள்!! சங்கரா மீன் சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்!! சங்கரா மீன் சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

Divya

அசைவ உணவுகளில் மீன் அதிக நன்மைகள் தரக் கூடியவையாக இருக்கிறது.இதில் கடல் மீனான சங்கரா அதிக ருசி கொண்ட மீன் வகை ஆகும்.இந்த மீன்கள் கடல் பாசிகளை உட்கொண்டு வளர்கிறது.இதை வாரம் இரண்டு முறை அவசியம் உட்கொள்ள வேண்டும்.

சங்கரா மீனில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள்:-

1)பொட்டாசியம்
2)தாமிரம்
3)மெக்னீசியம்
4)பாஸ்பரஸ்
5)துத்தநாகம்
6)தாமிரம்
7)மாங்கனீசு
8)செலினியம்
9)விட்டமின்கள்

சங்கரா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-

1.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய மீன் வகைகளில் ஒன்று சங்கரா.இந்த மீனில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

2.சங்கரா மீனில் இருக்கின்ற செலினியம் சத்துக்கள் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

3.சங்கரா மீனில் இருக்கின்ற வைட்டமின் ஈ சத்து சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

4.இதில் இருக்கின்ற வைட்டமின் ஏ உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

5.சங்கரா மீனில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்புகளை வலுவாக்குகிறது.

6.வாரம் ஒருமுறை சங்கரா மீன் சாப்பிட்டு வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.இந்த மீனில் குறைந்த கலோரி இருப்பதால் இதை உட்கொண்டால் உடல் எடை குறையும்.

7.இந்த மீனை எண்ணையில் பொரிக்காமல் சுட்டு சாப்பிட்டால் இதன் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

8.சங்கரா மீனில் உள்ள வைட்டமின்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.சங்கரா மீன் சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் வலுப்பெறும்.அதேபோல் கண்புரை நோயை தடுக்கும் ஆற்றல் சங்கரா மீனிற்கு இருக்கிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த சங்கரா மீனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாது என்று கூறுகின்றனர்.இதில் இருக்கின்ற மெத்தில் மெர்குரி தான் காரணம்.இந்த சங்கரா மீனில் மெத்தில் மெர்குரி அளவு சற்று அதிகமாகவே இருக்கிறது.கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை உட்கொள்வதால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.