தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?

0
36
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?

திருமாங்கல்யம் என்பது ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் புனிதமான ஒன்றாகும். திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மாங்கல்யத்தை கழுத்தில் அணிகின்றனர்.

திருமணத்திற்கு பின் தாலிக் கயிற்றை மாற்றுவதிலும், அதனை முறையாக பராமரிப்பதிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இது குறித்த முறையான வழக்கம் எதுவும் தெரியவில்லை. தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்? அதற்கு உகந்த நாள், பழைய தாலி கயிற்றை என்ன செய்ய வேண்டும் என்பதை பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தாலிக்கயிற்றை நினைத்த நேரத்தில் எல்லாம் மாற்றக் கூடாது. அதேபோல் அடிக்கடி மாற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.

**வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தாலி கயிற்றை மாற்றிக் கொள்ளலாம். நாம் அணியும் தாலிக்கயிறு நூல் கயிறாக இருக்க வேண்டும். நம் தாலிக்கு தினமும் மஞ்சள் தேய்த்து ககுளிக்க வேண்டும்.

ஒரு சிலர் மஞ்சள் தேய்க்க, தாலியை மற்ற சலித்து கொண்டு நைலான் கயிற்றில் தாலி அணிகின்றனர். இது முற்றிலும் தவறான செயல் ஆகும். அதுபோல் தாலிக்கயிற்றில் தாலி, தாலி உருக்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஊக்கு பின் உள்ளிட்ட பொருட்களை மாட்டி வைக்கக் கூடாது.

**சுப முகூர்த்த நாட்களில் தாலிக் கயிற்றை மாற்றுவது நல்லது. வாரத்தில் வெள்ளி, செவ்வாய், சனி உள்ளிட்ட நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் தாலி கயிற்றை மாற்றலாம்.

**நம் தாலிக் கயிற்றை மாற்ற பிறர் உதவியை நாடக் கூடாது. நம் திருமாங்கல்யத்தை வேறு ஒருவருக்கு காட்டக் கூடாது.

**தாலிக் கயிற்றை மாற்ற நினைக்கும் பெண்கள் கழுத்தில் அணிந்துள்ள பழைய தாலிக் கயிற்றை கழட்டாமல் முடிச்சுகளை மட்டும் அவிழ்த்து அதில் உள்ள தாலி மற்றும் குண்டுகளை மட்டும் எடுத்து புதுத் தாலிக் கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

**பழைய தாலிக்கயிற்றை ஓருசிலர் குப்பையில் போட்டு விடுகின்றனர். ஒரு சிலர் வீட்டில் கண்ட இடத்தில் வைத்து விடுகின்றனர். இது போன்ற தவற்றை இனி செய்யாதீர்கள். பழைய தாலிக் கயிற்றை கழட்டி நீர் நிலைகளில் விட்டுவிடுவது நல்லது.

**நாம் காட்டும் தாலியின் முடிச்சானது நெஞ்சு பக்கத்தில் தான் இருக்க வேண்டும்.

**பெண்கள் அவர்களின் கர்ப்ப காலத்தில் தாலி கயிற்றை மாற்றவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.