கோடநாடு கொலை வழக்கு! திடீரென்று ஏற்பட்ட திருப்புமுனை அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

Photo of author

By Sakthi

தற்சமயம் ஆட்சிக்கு வந்திருக்கின்ற திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செய்துவருகின்றது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கிடையில் இந்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் அரசு தரப்பு சாட்சியாக இருந்தவர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணையை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் இருக்கிறது வழக்கின் அடுத்த விசாரணையை விரிவு படுத்த இயலும். ஆகவே இந்த காவல்துறை விசாரணைக்கு தடை விதிக்க இயலாது என்று அதிரடியாக தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது அந்த சமயத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்த விசாரணையை அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது நேற்றைய தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்திருக்கின்ற விளக்கத்தில், கொடநாடு வழக்கு குறித்து அனைத்து உண்மைகளும் வெளிவரவேண்டு.ம் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கொடநாடு வழக்கில் புலன் விசாரணை செய்வதற்கு உதகை நீதிமன்றம் அனுமதி அளித்த இருக்கின்ற சூழலில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த தனிப்படையில் யார், யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா 5 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்த சூழ்நிலையில், அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 தேதி ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்துவிட்டார்.

சென்ற 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இதில் 11 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதுடன் 97 பெயர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உடன் ஒன்றாக இணைந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் உள்ளிட்டோர் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.