ராகுலின் மாஸ்டர் இன்னிங்ஸ்: இந்தியா 296 ரன்கள் சேர்ப்பு! வெற்றி பவுலர்கள் கையில்!

Photo of author

By Parthipan K

ராகுலின் மாஸ்டர் இன்னிங்ஸ்: இந்தியா 296 ரன்கள் சேர்ப்பு! வெற்றி பவுலர்கள் கையில்!

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதன் பின் தொடங்கிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று இந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

அதன் பின்னர் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஜோடி அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரெயாஸ் ஐயர் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மனிஷ் பாண்டே 42 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர். 21 ஓவர்கள் முடிந்துள்ள நிலையொல் 124 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளனர். விக்கெட்களை விழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வருகின்றனர்.