இந்திய அணி நியூசிலாந்து உடனான படு தோல்விக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா நியூசிலாந்து தொடரில் தோல்வி குறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ரோஹித் கோலி தான் என்று விமர்ச்சனங்கள் எழுந்தது.
இவர்கள் இந்த போட்டியில் இருவரும் இணைந்து 6 இன்னிங்ஸில் விளையாடி 100 ரன்கள் கூட அடிக்க வில்லை.இந்நிலையில் ஆஸ்திரேலியா உடனான தொடரில் முதல் இரண்டு போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஓகிஃப் ரோஹித் முதல ஒன்று அல்லது இரண்டு போட்டிகளை தவிர்க்க உள்ளார். அதன் பின் அவர் களமிறங்கினாலும் எங்கள் ஆஸ்திரேலியா வீரர்களின் நோக்கம் முதலில் கேப்டனை வீழ்த்துவது தான். அதனால் காலத்தில் அவர் மீது ஏராளமான தாக்குதல் ஏற்படுத்த காத்திருக்கிறார்கள். அவரை அவ்வளவு எளிதாக ரன் குவிக்க விடமாட்டார்கள்.
மேலும் இதற்கு முன் சீசன்களில் அதிக முறை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி உள்ளார். ஆனால் இப்போது அவரின் பேட்டிங் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் சிறந்த வீரர் தான் அவர் ராஜா தான் அப்படி இருந்தாலும் அவர் பலவீனமாக இருப்பது தெரிந்தால் அடி பலமாக இருக்கும். இந்த போட்டியை எப்படி கையாள போகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று கூறினார்.