மோசமான பேட்டிங்: கோலி அடைந்த சரிவு! ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு !
நியுசிலாந்து அணிக்கு எதிராக மிக மோசமான ஆட்டத்தால் கோலி தன் முதல் இடத்தை இழந்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சில ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார். அவருக்கு ஒராண்டு தடை விதிக்கப்பட்ட போது அவரது முதலிடத்தை இந்திய கேப்டன் கோலி பிடித்தார். பின்னர் ஓராண்டு தடை முடிந்து ஆஷஸ் தொடரில் கலந்துகொண்ட அவர் சிறப்பாக விளையாடி தனது முதல் இடத்தை மீட்டெடுத்தார்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளோடு சிறப்பாக சதமடித்த கோலி மீண்டும் நம்பர் 1 ஆனார். இதைப் போல இவர்கள் இருவரும் மாறி மாறி முதல் இரண்டு இடங்களை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது நியுசிலாந்து தொடரில் முதல் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் மோசமாக ஆடிய இந்திய கேப்டன் கோலி மீண்டும் முதலிடத்தை இழந்துள்ளார்.
அவர் 906 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்க, ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடங்களில் வில்லியம்சன்(853), லபுஷேன்(827) மற்றும் பாபர் அசாம்(800), டேவிட் வார்னர் (793), ஜோ ரூட் (764), ரகானே (760), புஜாரா (757), மயங்க் அகர்வால் (727) ஆகியோர் உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். அதனையடுத்த இடங்களில் நீல் வாக்னர், ஹோல்டர், ரபாடா மற்றும் ஸ்டார்க் ஆகியோர் உள்ளனர்.