“ஆசியக்கோப்பையில் கோலியின் இடம் மாற்றப்படலாம்…” பார்த்திவ் படேல் கருத்து

0
196

“ஆசியக்கோப்பையில் கோலியின் இடம் மாற்றப்படலாம்…” பார்த்திவ் படேல் கருத்து

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி ஆசியக்கோப்பையில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன.

விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் கோஹ்லியை அணியை விட்டு நீக்கவேண்டும் என்றும், அவரின் இடத்தை மாற்றி விளையாட வைக்க வேண்டும் என்றும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும் ரஞ்சி கோப்பை ஹீரோவுமான வாசிம் ஜாஃபர் “கோலியின் இடத்தை மாற்றக்கூடாது. அதுபோல அவர் கண்டிப்பாக டி 20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும். ராகுல் மற்றும் ரோஹித் ஓப்பனிங் இறங்க, கோஹ்லி மூன்றாவதாக இறங்க வேண்டும். மற்ற வீரர்கள் தேவைக்கேற்ப மாற்றி இறங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் மற்றொரு வீரரான பார்த்திவ் படேல் விராட் கோஹ்லி ஆசியக் கோப்பை தொடரில் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “கே எல் ராகுல் காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில் வீரர்களை மாற்றி மாற்றி தொடக்க ஆட்டக்காரராக இறக்குகிறார்கள். அதனால் ஆசியக் கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மாவோடு கோலி தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்படலாம்” எனக் கூறியுள்ளார்.

Previous articleயார் சிறந்தவர்… கோலியா? ரோஹித் ஷர்மாவா?… பிசிசிஐ அதிகாரி அளித்த பதில்!
Next articleபட்டதாரி இளைஞர்களே வேலை தேடுகிறீர்களா? அமேசான் நிறுவனத்தில் உங்களுக்காக காத்திருக்கும் புதிய வேலை வாய்ப்புகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here