இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் கோலி இல்லை… பிசிசிஐ வெளியிட்ட அணி… முழு விவரம்

0
168

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டி இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு இரண்டு அணிகளிலும் தலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மாறியுள்ளன. இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு நடக்க உள்ள போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிஙகை தேர்வு செய்ய இந்திய அணி 43 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ள டி 20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.

அணி விவரம்

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ருத்துராஜ், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா,  ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக்,  ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்திப் சிங், உம்ரான் மாலிக்

Previous articleஇதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி என்பது போல் சாய்பல்லவின் பந்தா ஆக்சன்!! கெடச்ச வாய்ப்பும் கைநழுவி விட்டு போச்சி!
Next articleவிக்ரம் படத்தின் மூலம் செம்மயா கல்லா கட்டிய கமல்… இத்தனை கோடியா என ஆச்சர்யத்தில் கோலிவுட்!