டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

Photo of author

By Vinoth

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

Vinoth

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

இந்திய அணியின் வீரர் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் சமீபகாலமாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, இப்போது மீண்டும் தன்னுடைய பார்முக்கு வந்துள்ளார். சமீபத்தில், டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரின் இன்னிங்ஸே அதற்கு சாட்சி.

அந்த போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக் பிரமித்து பாராட்டியுள்ளார். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை, கோஹ்லி தனது மாஸ்டர் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார் மற்றும் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து அவர் இப்போது டி 20 தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். 15 ஆவது இடத்தில் இருந்த அவர் இப்போது 6 இடங்கள் முன்னேறி 9 ஆவது இடத்துக்கு வந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் டாப் 10 க்குள் வந்துள்ளார். இந்த தொடரில் மேலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் இன்னும் முன்னேற்றம் காணுவார்.

டி 20 தரவரிசையில் முதல் இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும், இரண்டாம் இடத்தில் நியுசிலாந்தின் டிவோன் கான்வாயும், மூன்றாம் இடத்தில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்வும் உள்ளனர்.