இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டனாக அடித்த ரன்களைக் கோலி தகர்க்க உள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு வெறும் வீரராக விளையாடி வந்தார். கோலி பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கோலியும் கேப்டனாகப் பொறுப்பேற்ற பின்னர் தனது பங்களிப்பை அதிகமாக அளித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது கோலி அண்ட் கோ. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டித் தொடரில் கோலி தோனியின் ஒரு சாதனையை முறியடிக்க உள்ளார்.
டி 20 போட்டிகளில் தோனி கேப்டனாக எடுத்த ரன்களைக் கடக்க அவருக்கு இன்னும் 83 ரன்களே தேவை. அதை இந்த போட்டியிலேயே அவர் கடப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் டூ பிளஸ்சி முதல் இடத்திலும் அடுத்த இடத்தில் கேன் வில்லியம்ஸனும் உள்ளனர்,
டி 20 போட்டியில் தனி வீரராக அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி 2689 ரன் எடுத்து முதல் இடத்திலும், ரோகித் சர்மா 2633 ரன்னுடன் 2-வது இடத்திலும், மார்டின் கப்தில் 2436 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.