கல்லூரி மாணவனை அடித்து கொள்ளிடம் ஆற்றில் வீசிய கொடூரன்கள்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

Photo of author

By Parthipan K

கல்லூரி மாணவனை அடித்து கொள்ளிடம் ஆற்றில் வீசிய கொடூரன்கள்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் பகுதியில், நேற்று மதியம் 3:00 மணிக்கு, காதல் ஜோடி ஒன்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது இருவர் மது குடிக்க அப்பகுதிக்கு வந்துள்ளனர். காதல் ஜோடியை பார்த்ததும்,

யார் நீங்கள்? என்ன செய்கிறீர்கள் இங்கே, உங்கள் பெற்றோர் யார்? என்று மிரட்டும் வகையில் கேள்வி கேட்டுள்ளனர். மேலும் காதலனின் சட்டையை பிடித்து தாக்கியுள்ளனர். பிறகு அவரை கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். பின்பு பயத்தில் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி வாலிபரை தேடி வருகின்றனர். 20 வயதான இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், ஆற்றில் வீசப்பட்டவர், துறையூரைச் சேர்ந்த ஜீவித் வயது 20, திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில், மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கின்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

அந்த இளம்பெண், புலிவலத்தைச் சேர்ந்தவர், திருச்சி காவேரி பெண்கள் கல்லுாரியில், எம்.ஏ., பட்டப்படிப்பு படிப்பதும் தெரிய வந்துள்ளது.

காதலர்களை மிரட்டிய இளைஞர்கள், தேவிமங்கலம் கலையரசன் வயது 22, புள்ளம்பாடி கோகுல் வயது 22 அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.