Kollu Benefits in tamil: கொழுப்பை குறைக்கும் கொள்ளு..! யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?

Photo of author

By Priya

Kollu Benefits in tamil: தற்போது உள்ள நவீன காலக்கட்டத்தில் அனைவரும் ஓடிக்கொண்டு தான் உள்ளோம். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் எல்லாம் மறைந்துவிட்டது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் பாஸ்ட் புட் சாப்பிட்டு நமது உடல் எடையும் கூடிவிட்டது. தற்போது உடல் எடையை குறைபதற்காக பலரும் செலவு செய்து ஜிம் போய் வருகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் கொள்ளு சாப்பிட்டு உடலை கட்டுக்கோப்பாக (kollu benefits for weight loss in tamil) வைத்திருந்தவர்கள் தான் நம் தாத்தா, பாட்டி. கொள்ளுவை நம் உணவில் எடுத்துக்கொண்டால் நமது உடல் வலிமையாக இருக்கும்.

இது உடலில் உள்ள கொழுப்பை மட்டும் தான் குறைக்கிறது என்று நாம் எண்ணிவிட வேண்டாம். இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு சத்துக்களை நமது உடல் பெற முடியும். அதே சமயம் இதனை அளவுக்கு மீறியும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

நாம் இந்த பதிவில் கொள்ளில் உள்ள சத்துக்கள் என்ன? அதனால் உடல் பருமன் குறையுமா? கொள்ளு யாரெல்லாம் சாப்பிடலாம் என்பதை பற்றி விவரமாக காண்போம்.

கொள்ளுவில் உள்ள சத்துக்கள்

கொள்ளுவில் நார்ச்சத்து, புரதச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், தசை சத்து, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன.

கொள்ளு நன்மைகள்

கொள்ளு உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அதிகம் உணவில் பயன்படுத்துவார்கள். இது உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை இது குறைக்கிறது. உடலுக்கு அதிக வலிமை கொடுக்கிறது.

கொள்ளு ஊற வைத்த தண்ணீரை கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்துவதன் மூலம் சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் கட்டுப்படுத்துகின்றன.

மேலும் பெண்களுக்கு அதிகப்படியான வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்துகிறது.

வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு கொள்ளு சிறந்த நிவாரணியாகும்.

உடலில் உள்ள உறுப்புகள் பலம் பெறுவதற்கும் நோயிலிருந்து பாதுகாப்பதற்கும் கொள்ளு பெரும் உதவியாக இருக்கிறது.

சிறுநீரகத்தில் உள்ள கல்லை கரைக்க உதவுகிறது.

கொள்ளுவை நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு கொள்ளு.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை இது சரி செய்கிறது.

கொள்ளுவின் தீமைகள் – (kollu Side Effects in tamil)

கொள்ளு பயரில் ஃபைடிக் அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது எனவே கொள்ளுவை நீரில் ஊற வைத்து முளைக்கட்டி வைத்து சாப்பிட்டால் ஃபைடிக் அமிலம் அமிலத்தை குறைக்கலாம்.

பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பாட்டில் ஓரளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கொள்ளும் சாப்பிடும் முறை

  • கொள்ளுவை வறுத்து சாப்பிடலாம்.
  • கொள்ளுவை வறுத்து துவையல் செய்து சாப்பிடலாம்.
  • கொள்ளு பொடி தயார் செய்து வைத்துக்கொண்டு ரசதில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இதனை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வெகுவாக குறையும்.
  • அரிசியுடன் சேரத்து கஞ்சியாகவும் அருந்தலாம். மேலும் கொள்ளு ஊறவைத்த நீரை கொதிக்க வைத்து குடிக்கலாம்.

யார் சாப்பிடலாம்?

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது அளவுடன் கொடுக்க வேண்டும்.

இந்த கொள்ளு இயற்கையிலேயே சூடு என்பதால் இதனை குளிர் மற்றும் வெயில் காலங்களுக்கு ஏற்ற உணவாக பார்க்கப்படுகிறது. குளிர் மற்றும் வெயில் காலங்களுக்கு நமது உடலுக்கு தேவையான சூட்டை கொடுக்கிறது.

மேலும் படிக்க: உங்கள் கை கால் நகங்களில் அழுக்கு படிந்திருக்கிறதா? ஆபத்து.. இந்த தவறை இனி செய்யாதீர்கள்!