பயறு வகைகள் உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுப் பொருள்களாகும்.இந்த பயறுகளில் கொள்ளு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.இந்த பயிறில் கஞ்சி செய்து குடித்து வந்தால் உடலில் குவிந்துள்ள எல்டிஎல் கொழுப்பு கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கஞ்சியை வாரம் மூன்றுமுறை செய்து பருகலாம்.
பொருட்கள்:
கொள்ளு பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
வெள்ளை அவல் – 20 கிராம்
தயிர் – இரண்டு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
கொள்ளு கஞ்சி ரெசிபி:
முதலில் 50 கிராம் கொள்ளு பருப்பை வாணலியில் போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பிறகு 10 கிராம் வெந்தயத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பின்னர் 20 கிராம் வெள்ளை அவலை லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி கஞ்சி காய்ச்ச வேண்டும்.கொள்ளு கஞ்சி பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த கொள்ளு கஞ்சியை குடித்தால் கொழுப்பு கரைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.