cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் இளம் வீரர் கொன்ஸ்டாஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்திய அணி க்கு வாய்ப்பு மங்கிக்கொண்டே வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென்னாபிரிக்க அணி அதிக புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் கொன்ஸ்டாஸ் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் முன்னாள் தொடக்க வீரர் டேவிட் வார்னர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்று வரும் 4வது போட்டியில் அறிமுகமானவர் கொன்ஸ்டாஸ் இவர் முதல் போட்டியில் விளையாடி இந்திய அணியின் மற்றும் உலக தரம் வாய்ந்த பவுலரான பும்ரா பந்தை அதிரடியாக அடித்து ஒரு ஓவரில் 19 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த போட்டியில் பும்ரா ஓவரில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதுகுறித்து பேசிய வார்னர் அவருக்கு அனுபவம் இல்லை முதலில் அவர் தொடங்கி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவது அவர் செய்ய கூடாது. அவருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியும் எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் எப்போது நிதானமாக விளையாட வேண்டும் எனவே அவர்கள் அதை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.