விக்னேஷ் சிவன்- நயன்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை.!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

Photo of author

By Vijay

நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த அயல்நாட்டு படப்பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை பி.எஸ்.வினோத் இயக்கியுள்ளார்.

கூழாங்கல் திரைப்படம் ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது. மேலும், பல்வேறு சர்வதேச பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடநாத சில நாட்களுக்கு முன்பு ஷாங்காய் திரைப்பட விழாவில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும், கூழாங்கல் திரைப்படமும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்க கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதை இந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2022ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க யோகி பாபு நடித்த மண்டேலா, வித்யாபாலன் நடித்த ஷெர்னி, மலையாளத்தில் வெளியான நயட்டு உள்ளிட்ட 14 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.