கொர் கொர்.. நெஞ்சு சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் ஒரு கிளாஸ் மூலிகை பால்!!

Photo of author

By Gayathri

சாதாரண சளி பாதிப்பு தீவிரமடைந்தால் நெஞ்சு சளியாக உருவெடுத்துவிடும்.இந்த நெஞ்சு சளியால் மூச்சு திணறல்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடும் அவதியடைகின்றனர்.இந்த நெஞ்சு சளி பாதிப்பு நீங்க நம் பாரம்பரிய வைத்தியத்தை கையில் எடுக்க வேண்டும்.

சித்தரத்தை,மிளகு,சுக்கு,திப்பிலி போன்ற பொருட்களை கொண்டு நெஞ்சு சளியை குணமாக்கும் மூலிகை பால் தயாரிப்பது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)சித்தரத்தை
2)பசும் பால்
3)சுக்கு
4)மிளகு
5)திப்பிலி
6)ஏலக்காய்
7)பனங்கற்கண்டு

செய்முறை விளக்கம்:-

திப்பிலி,சித்தரத்தை,சுக்கு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.அனைத்தையும் 20 கிராம் அளவிற்கு வாங்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து 5 கிராம் சித்தரத்தையை போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு,ஐந்து கிராம் திப்பிலி மற்றும் ஐந்து கரு மிளகை தனி தனியாக வறுத்து ஆறவிடவும்.பிறகு இதை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து பாத்திரம் ஒன்றில் ஒரு கப் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.பால் லேசாக சூடானதும் அரைத்த மூலிகை பொடியை கொட்டி இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.பிறகு வாசனைக்காக சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பால் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.பிறகு இந்த
பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்தால் சளி,இருமல் மூன்று நாட்களில் குணமாகிவிடும்.சிறு குழந்தைகளுக்கு சளி இருமல் இருந்த இந்த பால் 1//4 கிளாஸ் அளவு கொடுத்தால் போதுமானது.