அழகான முகம் வேண்டுமென்று யார் தான் நினைக்கமாட்டார்கள், மனிதர்களாக பிறந்த அனைவருமே தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கொரிய பெண்களின் சரும அழகை கண்டு பல பெண்களும் பொறாமை கொண்டு வருகின்றனர். அந்த பெண்களது சருமம் பளபளவென்று பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது, இதற்கு காரணம் அவர்கள் பின்பற்றும் ‘ஜாம்சு’ எனும் ஒருவித டெக்னிக் தான். கொரிய வார்த்தையில் ஜாம்சு என்றால் நீரில் மூழ்குதல் என்பது பொருளாகும், அதாவது கொரிய பெண்கள் தண்ணீரில் முகத்தை மூழ்கி எடுத்து அழகை பெறுகிறார்கள்.
இந்த ஜாம்சு முறையின் மூலம் உங்களது சருமம் நீரேற்றமாக இருப்பதோடு, உங்களது மேக்கப் நீண்ட நேரம் இருக்கும் மற்றும் ஒரு மேட் ஃபினிஷ் லுக் கிடைக்கிறது. நீங்களும் இந்த முறையை பின்பற்றி அழகிய சருமத்தை பெற வேண்டுமானால் ஒரு கிண்ணத்தில் ஐஸ் தண்ணீரை வைத்து அந்த தண்ணீரில் உங்கள் முகத்தை 10-15 நிமிடங்கள் மூழ்க செய்ய வேண்டும். மேக்கப் போட்ட பிறகும் உங்கள் தண்ணீரில் வைக்க வேண்டும். முகத்தில் பவுண்டேஷன், கன்சீலரை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்கு ஈரப்பதமாக வைக்க வேண்டும், மேக்கப் முடித்த பிறகு ஒரு பவுடரை வைத்து செட் செய்ய வேண்டும்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் நீண்ட நேரம் ஐஸ் தண்ணீரில் முகத்தை வைக்க கூடாது, சில மணித்துளிகள் மட்டும் முகத்தை வைத்து கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, முகப்பருக்கள் எதுவும் வராமல் தடுக்கவும் உதவுகிறது. கொரிய பெண்கள் மட்டுமின்றி பல பிரபலமான பாலிவுட் நடிகைகளும் இந்த ஜாம்சு முறையை பின்பற்றுகின்றனர்.