பல வருடங்கள் கழித்து இவரது படத்தில் நடிக்கும் கவுண்டமணி! காரணம் இதுதானாம்!

Photo of author

By Hasini

பல வருடங்கள் கழித்து இவரது படத்தில் நடிக்கும் கவுண்டமணி! காரணம் இதுதானாம்!

Hasini

Countamani to star in her film many years later! This is the reason!

பல வருடங்கள் கழித்து இவரது படத்தில் நடிக்கும் கவுண்டமணி! காரணம் இதுதானாம்!

திரையுலகில் பல்வேறு நடிகர்கள் வந்து போவது வழக்கம் தான். ஆனால் சிலர் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் மிக முக்கியமான ஒருவர். பல விசயங்களை நகைச்சுவையிலேயே தெரியப் படுத்தி விடுவார். மேலும் அந்த காலத்திலேயே மிக அதிக சம்பளமும் வாங்கினார். அதிலும் இவர் சந்தையில் எது புதிதாக வந்தாலும், உடனே வாங்கும், கலை ரசனையோடு இருப்பார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தமிழ்பட உலகில்  1980 மற்றும் 1990 களில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் கவுண்டமணி. சமீபகாலமாக அவரது வயது மூப்பின் காரணமாக தற்போது படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அவர் கடைசியாக நடித்த படம் எனக்கு எங்கும் கிளைகள் கிடையாது மற்றும் வாய்மை ஆகிய படங்கள் 2016 ம் ஆண்டு வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது நடிகர் கவுண்டமணியை சிவகார்த்திகேயன் சந்தித்துப் பேசினார். அப்போது கவுண்டமணியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தலைசிறந்த நடிகர் கவுண்டமணியை சந்தித்தது இனிய தருணமாக அமைந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதை அடுத்து சிவகார்த்திகேயன் அவரது படத்தில் கவுண்டமணி நடிப்பாரா? இது சம்பந்தமாக தான் இருவரும் சந்தித்துப் பேசினார்களா? என்ற பரபரப்பு திரையுலகில் ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கவுண்டமணி நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அனைவருக்கும் நிலவுகிறது. ரசிகர்களும் நீண்ட காலத்திற்கு பிறகு கவுண்டமணியை புகைப்படத்தில் பார்த்து சந்தோஷமடைந்ததோடு, அவர் உங்கள் படத்தில் நடிக்கிறாரா? என்று வலைத்தளங்களின் மூலம் சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.