தேர்தல் நியாயமாக நடைபெறுமா? டவுட் ஆன முன்னாள் அமைச்சர்!

0
168

தமிழ்நாட்டில் இதுவரையில் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தற்சமயம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பரபரப்பான சூழ்நிலையில், தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலின்போது அரசியல் கட்சிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்று முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி சந்தேகம் கிளப்பி இருக்கிறார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருக்கிறார்கள், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதனை தடுப்பதற்காக ஆளுங்கட்சியினர் வன்முறையில் ஈடுபடலாம் அது கண்டிக்கத்தக்கது என கூறியிருக்கிறார்.

நீட் தேர்வில் அதிமுகவின் நிலைபாட்டை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த தேர்வை ரத்து செய்ய இயலாது என்று தெரிந்தும் கூட மாணவர்களை திமுக அரசு ஏமாற்றி வருகின்றது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அராஜகங்களில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நியாயமாக இந்தத் தேர்தல் நடத்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்திருக்கிறது எனவும் அவர் கூறியிருக்கிறார்.

Previous article28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்!
Next articleஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்! துரைமுருகன் சூசகப்பேச்சு!