28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்!

0
255

தமிழ்நாட்டில் இன்றைய தினம் தேனி, கோயமுத்தூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

நாளைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளைய தினம் வட உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Previous article9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்!
Next articleதேர்தல் நியாயமாக நடைபெறுமா? டவுட் ஆன முன்னாள் அமைச்சர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here