கிருஷ்ணகிரி ஆணவ படுகொலை – பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை!!

Photo of author

By Savitha

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவ படுகொலை சம்பவத்தில், படுங்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் முடிந்தது.

கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட நரம்புகளை மருத்துவர்களை இணைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இளம்பெண்ணிற்கு சுயநினைவு திரும்பி பேசுவதாக சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர், வேறுசமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணான அனுசுயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக திருமணம் செய்துகொண்ட காதல்ஜோடி திருப்பத்தூரில் வசித்து வந்த நிலையில்,சுபாஷின் தந்தை தண்டபாணி சொந்தஊரான ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து வீட்டில் தங்கவைத்துள்ளார்.

இந்த நிலையில் சுபாஷ் வேறுசமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்து நேற்று முன்தினம் தண்டபாணியின் மகன் சுபாஷ் மற்றும் சுபாஷியின் மனைவி அனுசுயா மற்றும் சுபாஷியின் பாட்டி ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் சுபாஷ் மற்றும் சுபாஷின் பாட்டி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் படுகாயமடைந்த அனுசியா சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக நரம்பியல் துறை,பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை, எலும்பியல் துறை ஆகிய மூன்று துறை மருத்துவர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர்.

உடல் முழுவதும் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட வெட்டுகாயங்களால் நரம்புகள் துண்டிக்கப்பட்டு நிலையில், அனைத்தையும் அறுவை சிகிச்சை மூலமாக இணைக்கப்பட்டுள்ளதாக சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும்போது, உயிருக்கு ஆபத்தான இருந்த நிலையில், உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுயநினைவு திரும்பி பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தீவிரசிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் முழுகண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .