என்ன இருந்தாலும் அதிமுக இதை செய்திருக்க கூடாது! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு

Photo of author

By Anand

என்ன இருந்தாலும் அதிமுக இதை செய்திருக்க கூடாது! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு

தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட அறிவித்திருந்தது.இந்த விழாவின் போது மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழாவையும் நடத்த திட்டமிட்டிருந்தது.

அந்தவகையில் தமிழக சட்டசபையின் நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் படம் திறப்பு விழாவும் இன்று மாலை நடைபெறவுள்ளது. சட்டசபையில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிகளில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.இந்நிலையில் அதிமுக இந்த முடிவை எடுத்திருக்க கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.முன்னதாக விடுதலை போராட்ட தியாகி வழக்கறிஞர் சுப்பிரமணிய சாஸ்திரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 1921 இல் பதவியேற்று 100 ஆண்டு முடிவடைந்த நிறைவு விழாவில், சென்னை, சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்களின் பேத்தி சுசீலா ஜெயச்சந்திரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது,

இன்று சட்டமன்றத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பட திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பது தவறு. கருணாநிதியை பொறுத்தவரை தமிழகத்தின் நீண்ட கால முதல்வர் மட்டுமல்ல‌. அவர் உழைப்பால் உயர்ந்த தலைவர்.மேலும் இந்த பட திறப்பு விழாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பட திறப்பு விழாவோடு ஒப்பிட கூடாது.

அன்று நாங்களும், திமுகவும் அந்த விழாவை புறக்கணித்தற்கு காரணம் அப்போதிருந்த சட்ட சிக்கல் தான், நீதிமன்றத்தால் ஜெயலலிதா குற்றவாளி என்று தண்டிக்தப்பட்டவர். அதனால் தான்  நாங்கள் அந்த விழாவில் பங்கேற்கவில்லை, இதையும்கூட சொல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. விவாதற்கு வந்துவிட்டதால் தான் இதை சொல்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.