உங்களில் பலருக்கு கத்தரிக்காய் மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாக இருக்கும்.கத்தரிக்காயில் வரி கத்தரி,வெள்ளை கத்தரி,நீட்டு கத்தரி,முள் கத்தரி,பச்சை கத்தரி என்று பல வகைகள் இருக்கின்றது.
அதேபோல் இந்த கத்தரிக்காயை வைத்து பொரியல்,கூட்டு,கடையல்,தொக்கு,சில்லி,பிரியாணி என்று பல ரெசிபிகள் செய்து உண்ணப்படுகிறது.கத்தரிக்காய் அதிக ருசி கொண்டுள்ளதால் இதை பலரும் விரும்பி உண்கின்றனர்.
கத்தரிக்காயில் வைட்டமின் சி,கால்சியம்,பொட்டாசியம்,இரும்பு,மாங்கனீசு,நார்ச்சத்து,தாமிரம்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.என்னதான் கத்தரிக்காயில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருந்தாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாக மாறிவிடும்.
கத்தரிக்காய் சாப்பிட கூடாதவர்கள் யார்?
*மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் கத்தரிக்காயை சாப்பிடக் கூடாது.
*வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக் கூடாது.
*தோல் அலர்ஜி,அரிப்பு,வண்டு கடி,சேற்றுப்புண் உள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
*நெஞ்செரிச்சல்,குடல் அலர்ஜி உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக் கூடாது.கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
*கத்தரிக்காயை அதிகளவு உட்கொண்டால் மலச்சிக்கல்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
*சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் கத்தரிக்காய் உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
*பித்தப்பையில் கற்கள் இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிகளவு கத்தரிக்காய் உட்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாகிவிடும்.
*இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிட்டால் அதன் தீவிரம் அதிகரித்துவிடும்.
*இரத்தப் பற்றாக்குறை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
*கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிட்டால் கண் எரிச்சல் அரிப்பு போன்றவை ஏற்படலாம்.
*பைல்ஸ் பாதித்தவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.