ஆயிரம் விளக்கில் மளமளவென குஷ்புவிற்கு அதிகரிக்கும் மவுசு! காரணம் என்ன தெரியுமா?

0
259
Kushboo
Kushboo

திமுகவினர் பெண்கள் குறித்து தவறாக பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதையடுத்து பெண்ணியம், சம உரிமை பேசும் அக்கட்சியின் முகமூடி மக்கள் மத்தியில் கிழிய ஆரம்பித்துள்ளது. அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாக களம் கண்டு, தினமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் குஷ்புவின் அணுகுமுறையும், பேச்சும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியினரையோ, தன்னை எதிர்த்து போட்டியிடுபவரையோ பற்றி அவதூறாக ஒரு வார்த்தை கூட பேசாமல், சிரித்த முகத்துடன் ‘உங்கள் சகோதரிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என வாக்கு சேகரித்து வருகிறார் குஷ்பு.

நேற்று ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க சென்ற குஷ்புவிற்கு திரளான இஸ்லாமிய பெண்கள் தடபுடலாக வரவேற்பு கொடுத்தது, அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் ஒரு பெண் வேட்பாளருக்கு மக்களிடம் இப்படியொரு வரவேற்பா? என மலைக்க வைத்துள்ளது. அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த எழிலனும், ஆ.ராசாவின் ஆபாச பேச்சால் சற்றே சுணக்கம் அடைந்துள்ளார்.

வீடு, வீடாக சென்று கையெடுத்து கும்பிட்டால் வாக்கு போட்டுவிடுவார்கள் என்ற மன கணக்கு எல்லாம் போடாத குஷ்பு, வேட்புமனு தாக்கலுக்கு முன்பு ஒரு குழுவை வைத்து அப்பகுதி மக்களின் குறைகளை ஆராய்ந்தார். அதன் பின்னர் தினமும் வாக்கு சேகரிக்க செல்லும் பகுதிகளில் எல்லாம் அப்பகுதி மக்களின் குறைகள் என்ன என்பதை நேரில் கேட்டு அறிந்து கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் சுகாதாரம், மாநகராட்சி பள்ளி மேம்பாடு, சாலை, தெருவிளக்கு, பாதாளசாக்கடை, முறையான குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளோடு, பல அசத்தல் வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளா குஷ்பு.

ஆயிரம் விளக்கு தொகுதிக்காகவே குஷ்பு தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை சோசியல் மீடியாவில் செம்ம பிரபலமாகி வருகிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் நினைக்கலாம் மேலே சொல்லியுள்ளவைகள்தான் சென்னை மக்களின் மிக மிக அவசியமான, அத்தியாவசியமான தேவை, அதை அரசிடம் முறையிடுவோம் வழங்கவில்லை என்றால் என் தனிப்பட்ட பணத்தில் செய்து கொடுக்கிறேன் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 234தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் செல்வ செழிப்பானவர்கள் கூட ” என் சொந்த பணத்தில் செய்கிறேன்” என யாரும் இதுவரை தெரிவித்திருக்காதபோது, குஷ்புவின் இச்செயல் பேசுப்பொருளாக அமைந்துள்ளது.

பெண்களின் ஆதரவும், மாணவர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் குஷ்புவிற்கு கூடிக்கொண்டே வரும் நிலையில், சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் அவருக்கு ஆதரவளித்துள்ள கூடுதல் பலமாக அமைந்துள்ளது. காரணம் சிவாஜி கணேசன் 70களில் தஞ்சாவூரில் இருந்து அவரது சொந்தகள் பலரை சென்னைக்கு அழைத்து வந்து ஆயிரம் விளக்கு பகுதியில் குடியமர்த்தினார். எனவே அவர்களுடைய வாக்கும் குஷ்புவிற்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை கோரவும் முயற்சி செய்து வருகிறார். வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்காமல் தனக்கு நெருக்கமானவர்களிடம் எனக்கு வாக்களிக்க கூறும்படியும் அன்பு கட்டளையிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக என்ற கட்சி என்பதை தாண்டி தனது தனிப்பட்ட செல்வாக்கில் தேர்தல் ரேஸில் அடித்து முன்னேறுகிறார் குஷ்பு என்றே சொல்லலாம். வேட்பாளர்கள் அறிவித்தபோது சமூக வலைதளம், தொலைக்காட்சியில் கூறப்பட்ட கருத்துகணிப்புகள் தற்போது தலைகீழாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். தற்போதைய நிலவரப்படி பெண் வாக்காளர்களிடம் அதிகரித்துள்ள குஷ்புவின் மவுசே அவருடைய வெற்றி வாய்ப்பை நிர்ணயித்துள்ளதை கண்கூடாக காண  முடிகிறது.

Previous articleஉஷார் மக்களே! பேராபத்தில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நாளை முதல் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!
Next articleஇரவு நேரங்களில் ரயிலில் இனி இதை பயன்படுத்த கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு