மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை.!! சொந்த கட்சியை விமர்சித்த குஷ்பூ.!!

Photo of author

By Vijay

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது பாஜகவினர் கார் இடித்து மோதியதில் 9 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரை கொன்றது பெரும் குற்றம். அந்த நபர் யார் என்பதை பொருட்படுத்தாமல், இதற்கு பொறுப்பானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்” என்ன பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச வன்முறைச் சம்பவம் தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர்கள் உத்திரப்பிரதேச முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பி வரும் நிலையில், சக பாஜகவினரான குஷ்பு விமர்சித்திப்ருப்பது அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.