மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

0
142

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழ்நாடு புதுச்சேரி கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டு முறைப்படி பொது தேர்வானது நடைபெற்று கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் கால சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் காணப்பட்டது.

தற்பொழுது பருவமழையானது பெய்து வருவதால் பள்ளிகளுக்கு அவ்வபோது விடுப்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து வருகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையமானது வரும் ஐந்தாம் தேதி வரை எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீடிக்கும் என கூறியுள்ளது. இந்த கன மழையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரடியாக வகுப்பிற்கு சென்று பாடங்களை கற்பிக்க முடியாது.

எனவே கனமழையானது குறையும் வரை அம்மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளார்.

அந்தவகையில் கனமழை ஐந்தாம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் நேற்று விடுமுறையை தாண்டி இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நாளை தொடர்ந்து மழை நீடிக்கும் ஆனால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாக தான் இருக்கும். இதர மாநிலங்களைப் போல் இந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

கனமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திக்கற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

Previous articleசூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்!!
Next articleமாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!