மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! 

0
134

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை!! 

நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 5) நடைபெற இருப்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கலில் உள்ள புகழ்பெற்ற கோவில் சிங்காரவேலர். தமிழ் கடவுள் முருகனின் முக்கியமான ஒரு கோவிலாக இது கருதப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலின் குடமுழுக்கு விழா இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அது சமயம் சிவன்,முருகன், பெருமாள் ஆகிய மூன்று கடவுள்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்கான பணிகள் கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகை மாவட்ட கலெக்டர் ஜான் டாம் வர்கீஸ் இன்று நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

நாகை தாலுக்கா சிக்கலில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான மக்கள் முருகனின் அருளைப் பெற வருவார்கள். எனவே இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஜூலை எட்டாம் தேதி சனிக்கிழமை பள்ளிக்கு வேலை நாளாக செயல்படும் என செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.