அஸ்வினே… அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!!

0
200

அஸ்வினே… அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற படத்தில் தோன்றிய பின் அவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது. அதனை அடுத்து தற்போது, ​ ”குக் வித் கோமளி சீசன் ” என்ற நிகழ்ச்சியின் மூலமாக அவர் பங்கேற்றார்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் ரன்னர்-அப் ஆக பட்டம் பெற்றார். இந்த நிகழ்ச்சி மூலமாக அவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். இதன் காரணமாக அவர் எப்படியும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறே அவருக்கு திரைப்படம் வாய்ப்புகள் வர தொடங்கியது.

https://www.instagram.com/reel/CRoc7uyjaiU/?utm_source=ig_web_copy_link

அஸ்வின் , ரெபா மோனிகா ஜானுடன் ஒரு புதிய ஆல்பம் சாங் நடித்தார்.அந்த பாடல் ‘குட்டி பட்டாஸ்’ எனப்பட்டது. இதன் பின் அவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகினார். அத்துடன் இவர் கிரிமினல் க்ரிஷ் என்ற ஒரு ஆல்பம் சாங் யும் நடித்திருந்தார் இந்த நிலையில் இவரது பாடல்கள் யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த ‘குட்டிபட்டாஸ்’ யூடியூபில் இந்த பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து இருக்கின்றது. 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளதால் பாட்டு குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இதில் அஸ்வின் மற்றும் ரெபா மற்றும் சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து அஸ்வின் தனது ரசிகர்களுக்கும் இன்ஸ்டாகிராமில் நன்றிகளை தெரிவித்து இருக்கின்றார். அத்துடன் அஸ்வின் ”என்ன சொல்லப்போகிறாய்” என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளார். இப்படத்தில் இவருக்கு அவந்திகா, தேஜூ அஸ்வினி என்ற இரண்டு ஜோடிகள் உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. இந்த படத்தின் பூஜை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆனது.

Previous articleஇவற்றையெல்லாம் பாதிக்காமல் கொள்கைகளை உருவாக்குங்கள்! முதல்வர் கூறிய அறிவுரை!
Next articleICSE  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன!! தெற்கு மண்டலம்100 % தேர்ச்சி!! மாணவர்கள் மகிச்சி!!