அரபிக்கடலில் இரண்டு புயல்கள்: கனமழை எச்சரிக்கை

0
126

அரபிக்கடலில் இரண்டு புயல்கள்: கனமழை எச்சரிக்கை

அரபிக்கடலில் ஏற்கனவே கியார் என்ற புயல் உருவாகி கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தற்போது புதியதாக மகா என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த இரண்டு புயல்கள் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

கியார் மற்றும் மகா புயல்களால் தமிழகத்திற்கு நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது என்றாலும் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக குமரி, நெல்லை, தஞ்சை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புதுவையிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று அதிகாலை நிலவரப்படி மகா புயல் திருவனந்தபுரத்திலிருந்து வடமேற்கில் 440 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும், இந்த புயல் லட்சத்தீவு பகுதியை கடந்து மத்திய அரசு கடல் பகுதிக்கு செல்லும் என்று கணிக்கப்பட்ட உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது இரண்டு புயல்கள் உருவாகியுள்ளதால் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து தமிழக, கேரள அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு குமரி மாவட்ட மற்றும் கேரள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Previous articleகல்லூரி மாணவனை அடித்து கொள்ளிடம் ஆற்றில் வீசிய கொடூரன்கள்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்
Next articleபட்டேல் 144-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு