ஒரே நாளில் சென்சுரிகள் அடித்த மூன்று பிரபலங்கள்

Photo of author

By CineDesk

ஒரே நாளில் சென்சுரிகள் அடித்த மூன்று பிரபலங்கள்

இன்று நடைபெற்ற மூன்று வெவ்வேறு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மூன்று பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஒரே நாளில் செஞ்சுரி அடித்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விராத் கோலி இன்று சதம் அடித்து அசத்தினார். அவர் 194 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 580 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் இன்று லாபசஞ்சே 185 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 20 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதே போட்டியில் டேவிட் வார்னர் 154 ரன்கள் எடுத்து சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வெயிட்லிங் சதம் அடித்து அசத்தியுள்ளார். இவர் 15 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் நடைபெற்ற மூன்று வெவ்வேறு போட்டிகளில் மூன்று பிரபலங்கள் செஞ்சுரி அடித்தது கிரிக்கெட் உலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.