திருமணமான பெண்கள் அனைவரும் தங்கள் கர்ப்ப காலத்தை எதிர்நோக்கி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது இயல்பான ஒரு நிகழ்வு தான்.அப்படி இருக்கையில் நீங்கள் கர்ப்பம் தரித்துவிட்டீர்கள் என்பதை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்.
1)பெண்களே உங்கள் மார்பு பகுதியில் வீக்கம்,அசௌகரியம் ஏற்பட்டால் அது கர்பத்திற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.
2)உங்களுக்கு அதிகளவு வாந்தி உணர்வு ஏற்பட்டாலோ அல்லது சம்மந்தம் இல்லாமல் வயிறு வலி ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் மாதவிடாய் தள்ளிப்போன நாட்களை கணக்கிட்டு பார்க்கவும்.
3)பிடித்த உணவுகள் கூட சாப்பிட விரும்பம் இல்லாமல் போகும்.புளிப்பு உணவுகளை உட்கொள்ள தோன்றும்.இது கர்ப்பத்தின் அறிகுறிகளாகும்.
4)காரணமின்றி வயிறு வீங்கி இருந்தாலோ அல்லது வயிறு பிடிப்பு ஏற்பட்டாலோ அது கர்பத்திற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
5)உடல் வெப்பநிலை அதிகரித்தலும் கர்பத்திற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.வழக்கத்தை விட உடல் சூடு அதிகமாக இருக்கும்.
6)உணவின் வாசனை உணர்வு அதிகரிக்கும்.சில வகை உணவு வாசனைகளால் வாந்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
7)உடல் சோர்வு அதிகமாக இருத்தல்.வழக்கத்தை விட உடலில் சோர்வு அதிகமாக இருந்தால் அது கர்பத்திற்கான அறிகுறிகளாகும்.
8)கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.இரவில் கூட அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.
9)சிறிது தூரம் நடந்தால் கூட கால் வீக்கத்தை உணருவீர்கள்.இதுவும் கர்ப்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.