பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியர்..!!

0
148

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியர்..!!

பெண்கள் கழிவறையில் தண்ணீர் குழாய்களுக்கு நடுவே செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

சென்னை ஐஐடி பல்கலையில் விண்வெளி ஆராய்ச்சி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் சுபம் பானர்ஜி என்பவர், பெண்கள் கழிவறையில் தனது செல்போனை தண்ணீர் குழாய்களுக்கு நடுவே மறைத்து வைத்து கழிவறைக்கு வரும் பெண்களை படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். செல்போனை வைத்துவிட்டு கழிவறையில் இருந்து சுபம் பானர்ஜி வெளியே வந்தபோது, அதே விண்வெளி ஆராய்ச்சி துறையை சார்ந்த மாணவி ஒருவர் இவரைக் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் வேகமாக கழிவறைக்குள் சென்று பல இடங்களில் சோதனை செய்துள்ளார். அங்கு இரண்டு பைப்புகளுக்கு நடுவே ஒரு செல்போன் இருப்பதை கண்டு மாணவி அதிர்ந்து போனார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாணவி நிறுவனத்தில் புகார் அளித்தார். சுபம் பானர்ஜியை தேடியபோது அவர் ஆண்கள் கழிவறையில் தனக்கு சம்பந்தமே இல்லாதது போல் பயத்தில் மறைந்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு சுபம் பானர்ஜி உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். உதவி பேராசிரியரின் தரக்குறைவான செயல்பாடு ஆராய்ச்சி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஒரே ஒரு நொடியில் உயிர் தப்பிய காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்
Next articleசகாயம் தலைமையில் கூடும் இளைஞர்கள் – மதுரையில் நடக்கப் போகிறதா முதல் கூட்டம்?