லிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத கொடுமையான சம்பவம்!  

0
180
Ladies who ask for a lift, beware!! A terrible incident happened to a young woman due to a lift!
Ladies who ask for a lift, beware!! A terrible incident happened to a young woman due to a lift!

லிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! ரயிலில் ஏற்றி விட்ட கொடுமை லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத சம்பவம்!  

லிப்ட் கொடுப்பது போல இளம்பெண்ணை கடத்தி சென்ற நபர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் ரயில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் மிர்கஞ்ச் பகுதியை  சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.  இவர் கடந்த 6 – ஆம் தேதி வழக்கம் போல வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஷா ஆலம் என்பவர் தான் அந்த பகுதிக்கு தான் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் அந்த இளம்பெண்ணையும் அவரின் வேலை செய்யும் இடத்தில இறக்கி விடுவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த நபரின் காரில் ஏறியுள்ளார். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணை உரிய இடத்தில் இறக்காமல் கட்டாயப்படுத்தி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள காஷிபூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த நபருக்கு தெரிந்த ஓட்டலில் தங்க வைத்து அந்த பெண்ணை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அத்தோடு நில்லாமல் அங்கிருந்த அவரின் நண்பர் இர்பான் என்பவனை வரவழைத்துள்ளார். அவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை ஷா ஆலம் நொய்டா பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு அவனது மற்றோர் நண்பன் நதீம் குரேஷி இடத்திற்கு அழைத்து சென்று அங்கு இருவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் மிகவும் சோர்வாக இருந்த அந்த பெண்ணிடம் ரூ.500 கொடுத்து காஷிப்பூர் செல்லும் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.  வீடு திரும்பிய அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை சொல்லி கதறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleவிஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!
Next articleபாஜாகவுடனான கூட்டணி முறிவு.. காலக்கெடு கொடுத்த எடப்பாடி!! மேலிடத்திற்கு எகிறும் பிரஷர்!!