பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!

0
145

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 8 மாதம் கர்ப்பிணியாக உள்ள பெண் கமாண்டோ சுனைனா படேல் என்பவர் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

அம்மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் ஊடுறுவல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு பலத்த கண்காணிப்பு நடந்து வருகிறது. தீவிரவாத கும்பலை ஒழிக்க சத்தீஸ்கர் போலீசாரும் ரிசர்வ் படையினரும் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ரிசர்வ் படையில் எட்டு மாத கர்ப்பிணியாக சுனைனா பணியாற்றி வருகிறார். இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த போது; நான் பணியில் சேரும் போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தேன், பணி என்று வந்துவிட்டால் எந்த சூழலிலும் பின்வாங்க மாட்டேன். என்று மன உறுதியுடன் கூறியுள்ளார்.

சுனைனாவை விடுமுறை எடுக்கச் சொல்லி தாண்டேவாடா எஸ்.பி அபிஷேக் பல்லவ் கூறிய போது, ஏற்கனவே ஒருமுறை பணியில் ஈடுபட்டு கர்ப்பம் கலைந்து போனது. விடுமுறை கொடுத்தால் கூட சுனைனா வேண்டாம் என்று மறுப்பதாக தெரிவித்துள்ளார். எட்டுமாத கர்ப்பிணி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காட்சிகள் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Previous articleஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Next articleஅம்மா இலவச இருசக்கர வாகனம் வேண்டுமா? இப்போதே விண்ணப்பிக்கலாம்.