பிரசவ வலி குறைய.. தாய்ப்பால் சுரக்க உதவும் லேகியம்!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்கள்.. மொத்த பிரச்சனையும் சரியாகிவிடும்!!

0
62

பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க நம் பாரம்பரிய முறைப்படி சீரகம்,மிளகு.ஒமம்,கொத்தமல்லி உள்ளிட்ட சிலப் பொருட்களை கொண்டு லேகியம் தயாரித்து சாப்பிடுங்கள்.இந்த லேகியம் ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி
3)அதிமதுரம் – 10 கிராம்
4)சித்தரத்தை – 10 கிராம்
5)கொத்தமல்லி விதை – கால் தேக்கரண்டி
6)ஓமம் – கால் தேக்கரண்டி
7)வெந்தயம் – கால் தேக்கரண்டி
8)கறிவேப்பிலை – ஒரு கொத்து
9)திப்பிலி – இரண்டு

செய்முறை விளக்கம்:-

1.சீரகம் மற்றும் ஓமத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு கருப்பு மிளகை அதில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் கொத்தமல்லி விதையை அதில் கொடி வறுக்க வேண்டும்.

3.அதேபோல் அதிமதுரம்,சித்தரத்தை மற்றும் திப்பிலியை சொல்லிய அளவுப்படி எடுத்து வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.

4.பின்னர் கறிவேப்பிலை இலையை அதில் கொட்டி கருகிடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.

5.வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

6.பிறகு பாத்திரத்தில் கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை கெட்டியாகும் வரை கிண்ட வேண்டும்.

7.இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்துக் கொண்டு வதக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு லேகியத்தை நன்கு ஆறவிட வேண்டும்.பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் பிரசவ வலி மெல்ல மெல்ல குறைந்துவிடும்.

மேலும் இந்த பொருட்களை வறுத்து பொடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகி வந்தாலும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Previous articleஇரண்டாக உடைய போகும் பாமக.. காடு வெட்டி குரு இடம் இவருக்கு தான்!! வெளியான பரபர தகவல்!!
Next articleகெமிக்கல் சோப் வேண்டாம்.. சருமத்தை மிருதுவாக்க நலுங்கு மாவு பயன்படுத்துங்கள்!!