லைகா கோவை கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவிய திருப்பூர் தமிழன்ஸ்

Photo of author

By Vijay

லைகா கோவை கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவிய திருப்பூர் தமிழன்ஸ்

TNPL-இன் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி 8வது சீசன் தமிழகத்தில் நடை பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று நடை பெற்ற நிலையில் நேற்று வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன்-இல் லைகா கோவை கிங்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதியது.

முதலாவது பேட்டிங் செய்த கோவை அணி தொடக்கத்தில் சுரேஷ்குமார் 6 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அடுத்த காலம் இறங்கிய சச்சின் மற்றும் சுஜேய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.பிறகு சுஜேய் ஆட்டம் இழக்க அடுத்து சாருக் கான் களம் இறங்கினார்.

அதிரடியாக விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 55 ரன்கள் விளாசினார். மேலும் சச்சின் அவர்கள் 30 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் தனது பங்கிற்கு ரன்களை சேர்த்தனர் இறுதியாக கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 160 ரன்கள் எடுத்தது திருப்பூர் அணியின் பௌலர்கள் நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 2 விக்கெட் எடுத்தனர் .

இதைனை அடுத்து அடுத்து பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி தொடக்க ஆட்டகாரராக களம் இறங்கிய ராதாகிருஷ்ணன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அதன் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டகாரரான துஷார் ரஹேஜா அவர்கள் சிறப்பாக விளையாடி 81 ரன்களை குவித்தார்.

ஒரு கட்டத்தில் முஹம்மத் அலியும் மற்றும் துஷார் ரஹேஜா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. பிறகு முஹம்மத் அலி 35 ரன்னில் ஆட்டம் இழக்க 19வது ஓவரில் துஷார் ரஹேஜா ஆட்டம் இழந்தார் இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது லைகா கோவை கிங்ஸ் அணி.