இந்த நாட்களில் கட்டாயம் விளக்கு ஏற்றக்கூடாது!! மீறினால் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறும்!!

Photo of author

By Rupa

இந்த நாட்களில் கட்டாயம் விளக்கு ஏற்றக்கூடாது!! மீறினால் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறும்!!

தினம்தோறும் பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் வீடு லட்சுமி கடாட்சமாக இருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சில நாட்களில் விளக்கு ஏற்றக்கூடாது என்று ஐதீகமும் உள்ளது. அவ்வாறு ஏற்றுவதால் நாம் லட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு சமம் என்று ஆன்மீகத்தில் கூறுகின்றனர். எந்தெந்த நாட்களில் விளக்குகள் ஏற்றலாம் ஏற்றக்கூடாது என்பதை பின்வருவற்றில் காணலாம். நமது உறவினர்கள் யாரேனும் இறந்தால் அதாவது பங்காளி என்று கூறப்படும் யாரேனும் இறந்தால் நமது வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. காரியம் முடிவதற்குள் விளக்கு ஏற்ற கூடாது. காரியம் முடிந்த பிறகு வீட்டை மற்றும் பூஜை அறையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்த பிறகு விளக்கு ஏற்ற வேண்டும். உங்களது பங்காளிகளின் வீட்டில் நீங்கள் சண்டையிட்டு பேசாமல் இருந்தாலும் கூட அங்கு காரியம் முடிந்த பிறகு உங்கள் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். அதேபோல நமது உறவினர்கள் வீட்டில் இறப்பு நேர்ந்த பொழுது சக நண்பர்கள் வீட்டில் ஏதேனும் விசேஷம் இருந்தால் நமது பிள்ளைகளை அனுப்பி வைக்கலாம். நாம் செல்வதை விட நமது வீட்டில் இருக்கும் பிள்ளைகளை அனுப்பி வைப்பது நல்லது. அதேபோல நீங்கள் இருக்கும் தெருகளில் யாரேனும் இறந்து விட்டால் அவரின் உடலை எடுத்து நல்லடக்கம் செய்யும் வரை விளக்கு ஏற்ற கூடாது. அவர்கள் நம் ரத்த பந்தமும் அல்லது சொந்தமோ தெரிந்த முகமோ என்பது தேவையில்லை. அவரை அடக்கம் செய்யும் வரை நமது வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. மீறி இந்த நாட்களில் விளக்கு ஏற்றினால் நமது வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் வெளியேறும்.