தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி !
காங்கோ தங்க சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கின்ஷாசா பகுதியில் அமைந்துள்ள காங்கோ தங்க சுரங்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவால் பாலயாக சம்பவம் அரங்கேறியுள்ளது.கிழக்கு காங்கோ தெற்குக் கிவு மாகாணத்தின் ஒரு பகுதியான கமிதுகா நகரில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தங்க சுரங்கத்தின் நிலச்சரிவு அதிகமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்டோர், சம்பவ இடத்திலேயே பலியானதால் அச்சம் நிலவுகிறது.மேலும் பலியானவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால் சராசரி எண்ணிக்கை இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.