நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

Photo of author

By Gayathri

நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் மலையால் திருவண்ணாமலையில் உள்ள வ உ சி நகரில்  மண் சரிவு ஏற்பட்டு மூன்று வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

 

மொத்தம் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏழு பேர் இதில் மாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியானதை எடுத்து மீட்கப்படுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மலையடிவாரத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

நேற்று இரவு வரை மழை விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்ததால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், ஆறுகளில் தண்ணீர் மட்டம் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருசில பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. திருவண்ணாமலையில் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

 

குறிப்பாக ஒரு பெரிய பாறை ஒன்று சரிந்து அந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதையடுத்து இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடுகளில் 7 பேர் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

ராஜ்குமார் என்பவரின் வீட்டில் தான் இந்த பாறை சரிந்து விழுந்துள்ளது. வீட்டில் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, இவர்களது குழந்தைகள் கவுதம், இனியா மற்றும் ராஜ்குமாரின் உறவினர்களின் மகன், மகள்கள் தேவிகா, வினோதினி இன்னொரு பெண் என மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனை அடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.