நிலச்சரிவு கனமழையால் இதுவரை 133 பேர் பலி!! அரசு வெளியிட்ட தகவல்!!
இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வட இந்தியா மற்றும் தென் இந்தியா பகுதிகளில் கனமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பு மாறும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வடக்கு பாகிஸ்தான் பகுதிகளும் கடத்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது.
மேலும் பாகிஸ்தான் முக்கிய சுற்றுலா பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு கனமழை காரணமாக மக்களிடம் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும் மாறு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் அதிக இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் வடமேற்கு கைபர் மாகாணத்தில் ஞாயிற்றுகிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலசரிவில் மவமாவட்டமான சிட்ரல், தீர் மற்றும் பட்டகிராமில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பாகிஸ்தான் அரசு அறிவித்த அறிவிப்பில் கனமழை மற்றும் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக இதுவரை 133 பேர் உயிரி இழந்துள்ளதாக தெர்வித்துள்ளது. மேலும் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜீலம், சட்லெஜ் மற்றும் சொனாப் ஆகிய முக்கிய நதிகள் கனமழையால் நிரம்பி உள்ளது என்றும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இது வரை 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளது.