நம் இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.நாம் உயிர் வாழ இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.சிலருக்கு இதயத் துடிப்பு வேகமாக,மெதுவாக அல்லது சீரற்று இருக்கும்.இதில் இதயம் வேகமாக துடிக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
இதயம் சில சமயம் வேகமாக துடிக்கும்.இது சாதாரண விஷயம்தான்.ஆனால் இதயத் துடிப்பின் வேகம் எப்பொழுதும் அதிகமாக இருந்தால் அது ஆபத்தான விஷயமாகும்.நம் இதயத் துடிப்பின் தன்மையை பரிசோதனை மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.
இதயத் துடிப்பு அதிகமாக இருந்தால் அது தீவிர இதயப் பிரச்சனையை குறிக்கிறது.இதயம் வேகமாக துடிக்க பல காரணங்கள் சொல்லப்படுகிறது.அதிக மன அழுத்தம்,அதிக மன உளைச்சல்,படபடப்பு,பதற்றம் போன்றவை இதயம் வேகமாக துடிக்க காரணமாகும்.
காஃபின் நிறைந்த பானங்கள்,தைராய்டு பாதிப்பு,இரத்த சோகை நோய்,இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கிறது.இதயத் துடிப்பு வேகமாக இருந்தால் நீங்கள் அலட்சியம் செய்யக் கூடாது.
இதயத் துடிப்பு அதிகரிப்பின் அறிகுறிகள்:
1)மூச்சுத் திணறல்
2)மார்பு பகுதியில் வலி உணர்வு
3)தலைச்சுற்றல்
4)உடல் சோர்வு
5)பதட்டம் அதிகரிப்பு
6)அசௌவ்கரிய உணர்வு
இதயம் வேகமாக துடிக்க காரணம்:
1)மருந்துகளின் பக்க விளைவு
2)காபின் நிறைந்த பானங்கள்
3)ஆற்றல் நிறைந்த பானங்கள்
4)பதட்டம்
5)படபடப்பு
6)தைராய்டு பாதிப்பு
7)அனீமியா
8)இருதயப் பிரச்சனை
உங்களுக்கு திடீரென்று இதயத் துடிப்பு அதிகரிக்கிறது என்றால் நீங்கள் சில விஷயங்கள் மூலம் அதை சரிசெய்து கொள்ளலாம்.உங்களுக்கு வேகமான இதயத் துடிப்பு இருந்தால் நீங்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும்.அதன் பிறகு ஆழ்ந்த சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.அடுத்து குளிர்ந்த நீரை பருக வேண்டும்.
வேகமாக இதயத் துடிப்பு பிரச்சனையை சரி செய்வது எப்படி?
முதலில் உடலுக்கு தேவையான உறக்கத்தை அனுபவிக்க வேண்டும்.தினமும் 30 நிமிடங்கள் தியானம்,யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.
நடைபயிற்சி,மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.இதய ஆரோக்கியத்தை காக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.