மோசமான உணவுப் பழக்கத்தால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிறுக் கோளாறு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.இதில் பாடாய் படுத்தும் அஜீரணக் கோளாறு குணமாக இந்த டீ செய்து குடிங்க.
தேவையான பொருட்கள்:-
1)ஐந்து புதினா இலை
2)ஒரு தேக்கரண்டி தேன்
3)ஒரு கிளாஸ் தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
**அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஐந்து புதினா இலைகளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
**புதினா பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பானத்தை கிளாஸிற்கு வடிகட்ட வேண்டும்.
**பின்னர் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உண்ட உணவு சீக்கிரம் செரிமானம் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம்
2)ஒரு தேக்கரண்டி தேன்
3)ஒரு கிளாஸ் தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
**அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு வறுக்க வேண்டும்.
**பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பெருஞ்சீரக பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகினால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஒரு எலுமிச்சம் பழம்
2)ஒரு தேக்கரண்டி தேன்
3)ஒரு கிளாஸ் தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
**பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை கிளாஸிற்கு ஊற்ற வேண்டும்.
**பின்னர் எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.
**பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து பருகினால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஐந்து துளசி இலைகள்
2)ஒரு கிளாஸ் தண்ணீர்
3)சிறிதளவு தேன்
செய்முறை விளக்கம்:-
**துளசி இலைகளை தண்ணீரில் சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
**பின்னர் இந்த துளசி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.