தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாட்டு வண்டி ஓட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டான்கோயில் கீழ்பாகம் பகுதியில் தனது பாரம்பரிய விவசாய தொழிலில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டார். எந்த பதவியில் இருந்தாலும் தனது முன்னோர் விவசாய பணியில் இவர் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார்.
வேளாண் தேவைக்காக மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். இதற்கு முன்பு கரூர் திருவள்ளூர் மைதானத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது அரசு சார்பில் வழங்கி இருந்த டிராக்டரை தானே ஓட்டிப்பார்த்து சோதனை செய்தார்.
இந்நிலையில் தமிழக அரசியலில் ஒரு முக்கிய பதவியில் இருந்தாலும் கடந்த காலத்தை மறக்காமல் எளிமையாக விவசாயிகளோடு விவசாயியாக மாட்டுவண்டி ஓட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காவல்துறை பாதுகாப்பு, அரசியல் கட்சியினரோ உடனில்லாமல் தனியாக சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.