சட்டப் படிப்பை படித்து, அதில் தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்கள், முறைப்படி ஒரு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும்.
படித்த பட்டதாரிகளின் வேலையில்லாத ஆரம்ப கட்ட நிலையில் அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதாவது படிப்பு முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு, ரூபாய் 3000 மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் துவக்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தை துவங்கியதுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களையும், ஆடியோக்களையும் கொண்ட எல்இடி வாகனங்களை தொடங்கி வைத்துள்ளார். மொத்தம் 33 எல்லிடி வாகனங்கள் தமிழகத்தில் மட்டும் செயல்படுத்தப்பட உள்ளது.